போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் கோர்மி கிராமத்தை சேர்ந்தவர் சோனி ஜெயின். இவர் மாற்றுத்திறனாளி என்பதால், நீண்ட நாள்களாக திருமணம் தள்ளிப்போகியுள்ளது.
இந்நிலையில், அவருக்கு உதால் ஹாதிக் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.
பொண்ணு இருக்கு ஆனா 1 லட்சம்
சோனியின் நிலைமையை அறிந்த ஹாதிக், தனக்கு தெரிந்த பெண் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளப் பெண்ணின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திருமண ஆசையில் தவித்துவந்த சோனிக்கு, இந்த தகவல் வரப்பிரசாதமாக அமைந்தது. சோனியின் குடும்பத்தினருக்கும், பெண்ணை பிடித்திருந்ததால், அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இறுதியாக, ரூ.90 ஆயிரம் மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து, சோனி ஜெயினுக்கும், அனிதா ரத்னாகுமாருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் நடைபெற்ற அன்று, அனைவரும் வீட்டில் அவரவர் அறையில் உறங்க தொடங்கினர்.
மொட்டை மாடியில் முதலிரவு
முதலிரவு ஆசையில், அறைக்கு நுழைந்த சோனியிடம், அனிதா தனக்கு மூச்சுவிட சிராமாக இருப்பதாக கூறி, மொட்டை மாடிக்கு செல்லலாம் எனத் தெரிவித்துள்ளார். மொட்டை மாடியில் முதலிரவா என்ற கனவுடன் அவரை மேலே அழைத்து சென்றுள்ளார் சோனி. இருவரும் சிறிது நேரத்தில் தூங்க தொடங்கியுள்ளனர்.
நள்ளிரவில் மாயம்
இந்நிலையில், நள்ளிரவில் சோனியின் குடும்பத்தினர் திடீரென விழித்துக்கொண்டனர். மகன் அறை திறந்துகிடந்ததால், அவர்களை வீடு முழுவதும் தேடியுள்ளனர். அப்போது, சோனி மட்டும் தனியாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
மாடியிலிருந்து ஜம்ப் அடித்த மணப்பெண்
மொட்டை மாடியிலிருந்து மணமகள் அனிதா தப்பித்துயோடியது தெரியவந்துள்ளது. தப்பியோடிய அனிதா, காவல் துறையின் ரோந்து பணியின்போது சிக்கிக்கொண்டார். இதுகுறித்து சோனிக்கு காவல் துறையினர் தகவல் அளித்தனர்.
விசாரணையில், பணம் பறிக்கும் நோக்கில் பொய்யாக திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து, அனிதா உள்பட அவரது குடும்பத்தினர் மீது பண மோசடி புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தெரு நாய்களுக்கு விஷ ஊசி... கொத்து கொத்தாக கிடைத்த 300 சடலங்கள்!