புதுச்சேரியை அடுத்த கைக்கிளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவள்ளி, அபிராமி ஆகியோர் நேற்றிரவு(மே.06) சங்கராபரணி ஆற்றங்கரை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு உள்ள சிவன் கோயில் அருகே உள்ள குப்பைமேட்டிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் இருவரும் அருகில் சென்று பார்த்த போது, சாக்குமூட்டையிலிருந்து குழந்தை அழும் சத்தம் வந்துள்ளது. அதை பிரித்து பார்த்தபோது, உள்ளே தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை இருந்தது. இதையடுத்து இருவரும் புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனிடையே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தை நலமாக உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முசிறியில் நள்ளிரவில் வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு!