வரும் 2021 புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயர் வணிக வீதிகளிலும், நகரங்கள் முழுவதிலும் உள்ள மேல்தட்டு பகுதிகளிலும் கூடவுள்ளதால் அதனை தடுக்க, பாதுகாப்புக்காக காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தென் மாநிலங்களில் கரோனா பாதிப்பு 50 விழுக்காடு குறைந்துள்ளது. இருந்தபோதிலும், குளிர் காலநிலை, மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், கரோனாவின் இரண்டாவது அலை குறித்து நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனால், இம்முறை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி பொது இடங்களில் புத்தாண்டை கொண்டாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புத்துயிர் தருமா புத்தாண்டு...? சீசனுக்காக காத்திருக்கும் வங்கக் கரையோர வியாபாரிகள்...!