ஜோத்பூர்: ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிக்கு 9 பேர் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையில் தம்பதி நீதிபதி உள்பட புதிதாக 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகளில் நுபுர் பாட்டி, புஸ்பேந்திர சிங் பாட்டி ஆகியோர் தம்பதியினர் ஆவர்.
ஏற்கனவே ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மகேந்திர கோயல் மற்றும் சுபா மேத்தா என்ற தம்பதி நீதிபதிகளாக உள்ளனர். தற்போது மேலும் ஒரு தம்பதி நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதன் மூலம் நாட்டிலேயே இரு தம்பதி நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்றம் என்ற தனிச் சிறப்பை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பெற்றது.
பதவியேற்றுக் கொண்ட 9 நீதிபதிகளில் 3 பேர் வழக்கறிஞர்களாக இருந்து, நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றவர்கள். கடந்த திங்கட்கிழமை (ஜன.16) பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகளில் புஸ்பேந்திர சிங் பாட்டி ஒருவர் மட்டுமே பெண். இதன் மூலம் ராஜஸ்தான் நீதிமன்றத்தில் உள்ள பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
இதையும் படிங்க: பறிபோன வேலை.. யூடியூபில் போட்ட உழைப்பு - ரூ.50 லட்சத்தில் ஆடி காராக ரிட்டர்ன்; சம்பளம் தெரியுமா?