ETV Bharat / bharat

ட்ராக்டரில் அலுவலகத்திற்கு சென்ற பெங்களூரு ஐடி ஊழியர்கள் - தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்

கடந்த சில நாட்களாக பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக ஐடி ஊழியர்கள் ட்ராக்டரில் அலுவலகத்திற்கு செல்கின்றனர்.

ட்ராக்டரில் அலுவலகத்திற்கு சென்ற ஐடி ஊழியர்கள்

author img

By

Published : Sep 6, 2022, 11:22 AM IST

பெங்களூரு: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெங்களூரு கடும் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள பல ஐடி ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர்.

எச்ஏஎல் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஏமலூர் பகுதியில் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் பலர் டிராக்டர் மூலம் அவர்களது அலுவலகங்களுக்கு சென்றுள்ளனர். இது குறித்து ஐடி ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘நகரத்தில் உள்ள ஐடி ஊழியர்களுக்கு டிராக்டர் சவாரி செய்வது முற்றிலும் புதிய அனுபவமாகும்.

  • #WATCH via ANI Multimedia | Many employees of IT companies are forced to use tractors to reach their offices in the Yemalur area of Bengaluru, Karnataka amid waterlogging due to heavy rains.https://t.co/TXX3aFEntQ

    — ANI (@ANI) September 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அலுவலகத்தில் இருந்து அதிக நாள் விடுமுறை எடுக்க முடியாது. எடுத்தால் எங்கள் பணி பாதிக்கப்படும். டிராக்டர்களில் அலுவலகம் செல்ல ரூ50 ஆகும்’ எனத் தெரிவித்தார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘ பெங்களூருவில் மழை மற்றும் வெள்ளத்தால் ரூ.225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் மாநில தலைநகரில் மழை மற்றும் வெள்ளத்தால் ஐடி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் இழப்பீடுகள் குறித்து விவாதிப்பதாக கூறினார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்து, தண்ணீர் தேங்குவதால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் பேசுவோம். மழையினால் ஏற்பட்ட இழப்பீடு மற்றும் பிற சேதங்கள் குறித்தும் விவாதிப்போம்" என்று பொம்மை தெரிவித்துள்ளார்.

சாலைப் பிரச்சினையைத் தீர்க்குமாறு முதலமைச்சரிடம் ஐடி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதையடுத்து முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். பெங்களூரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோரமங்களா பகுதியில் பெய்து வரும் கனமழையால் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனம் ஓட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். நகரின் கீழ்த்தளத்தில் உள்ள கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பலவற்றில் வெள்ளம் சூழ்ந்தது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "எப்போது மழை பெய்தாலும் இந்த பிரச்சனைகள் ஏற்படும். எனினும் இந்த ஆண்டு அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அடித்தளத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் சிரமப்படுகின்றனர். மோசமான வடிகால் அமைப்பு காரணமாக வருடாவருடம் தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது’ எனக் கூறினார்.

முன்னதாக ஜூலை மாதம் கர்நாடகாவில் மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டது. அதன் பிறகு மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. முதல்வர் பொம்மையும் மத்திய அரசிடம் நிதி உதவி கோரினார்.

இதையும் படிங்க:செப்டம்பர் 8 அன்று பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட டெல்லி சென்ட்ரல் விஸ்தா அவன்யூ திறக்கிறார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.