பாட்னா: உலகம் முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்துவந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிவருகிறது. இந்த நிலையில், பல்வேறு நாடுகளில் தொற்றுபரவல் அதிகரித்துவருகிறது.
அந்த வகையில், ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் கரோனா தொற்று உறுதி எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கனிசமாக தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், பிகாரில் ஒமைக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய பிஏ. 12 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஐஜிஐஎம்எஸ் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் நம்ரதா குமாரி கூறுகையில், ஒமைக்ரான் தொற்று மாறுபாடான BA.2 , BA.12 10 10 மடங்கு வேகமாக பரவக்கூடியவை. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த தொற்று குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. மக்கள் பீதி அடைய வேண்டாம். இந்த மாறுபாடு குறித்த ஆய்வு நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'எவ்வகை கரோனா வந்தாலும் எதிர்கொள்வோம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை