பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப்பேத்தி ராஜ்யஸ்ரீ சௌத்ரி, இன்று (ஆக.8) வாரணாசிக்குச்சென்றபோது நடுவழியில் பிரயாக்ராஜ் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். வாரணாசிக்கு ரயிலில் பயணித்த அவரை, பிரயாக்ராஜ் சந்திப்பில் ரயிலிலிருந்து போலீசார் இறக்கி, பின்னர் அப்பகுதியிலுள்ள போலீஸ் லைனில் உள்ள கங்கா விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர்.
முன்னதாக இவர், இந்து மகாசபாவின் தேசியத்தலைவராக உள்ளார் என்பதும் உத்தரப்பிரதேசத்திலுள்ள ஞானவாபியில் ஸ்ரீநகர் கௌரி அம்மனை வழிபடுவதற்காக சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாரணாசியில் நடக்கும் கோயில் விழாக்கள் முடியும் வரையில் அவர், போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றும்; விழா முடிந்ததும் போலீசாரால் விடுவிக்கப்படுவார் என்றும் இது குறித்து போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன் சிந்து - பிரதமர் மோடி புகழாரம்