ETV Bharat / bharat

HBDNehru: மனித மாண்புகளை மகளுக்கு கடிதம் மூலம் கற்றுக்கொடுத்த நேரு - Jawaharlal Nehru the first Prime Minister of India

இந்தியாவின் முதல் பிரதமரும், நவீன இந்தியாவின் தந்தை எனவும் அழைக்கப்பட்டவருமான ஜவஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த தினம் இன்று (நவ-14) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

Etv BharatHBDNEHRU: மனித வரலாற்றை மகளுக்கு  கடிதம் மூலம் கற்று கொடுத்த நேரு

author img

By

Published : Nov 14, 2022, 8:03 PM IST

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் உள்ள செல்வசெழிப்பான குடும்பத்தில் 1889ஆம் ஆண்டு நவம்பர் 14இல் பிறந்தவர் ஆவார். வளம்மிக்க குடும்பத்தில் பிறந்தாலும் காங்கிரஸில் இணைந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகவும் பொறுப்பேற்றார். அவரது பிறந்தநாளை இன்று (நவ-14) காங்கிரஸ் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

நேருவின் பாச மகளான இந்திரகாந்தியும் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டதால் பின்னாளில் நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். இந்திராவின் இளமைக்காலத்தை ஈர்ப்புமிக்க காலமாக மாற்றிய பங்கு நேருவையே சாரும். இந்திராவின் அருகில் இருக்க முடியாத காரணத்தால், இருவரும் கடிதங்கள் மூலம் உரையாடிக் கொண்டனர். ஏனெனில் இந்திராவின் குழந்தைப்பருவத்தில் நேரு நாட்டிற்காக சிறைவாசத்தை அனுபவித்தார். அப்போது, அவரது பத்து வயது மகளான இந்திராவிற்கு உலகம் உருவான அறிவியல் குறித்தும், வரலாறு குறித்தும் கடிதங்களாக எழுதினார்.

நேரு இந்திரா பிரியதர்ஷினிக்கு மொத்தம் 30 கடிதங்கள் எழுதியுள்ளார். இருவருக்கும் வாசிப்பு மீது இருந்த ஆர்வத்தால் இந்த கடிதப் பரிமாற்றம் வளர்ந்தது. இந்த அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 'letters from a father to his daughter' என்ற புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.

நேரு அகமதாபாத்திலும், இந்திரா முசெளரியிலும் இருந்தனர். இந்தக் கடிதங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதற்காகவும், தனது மகளுக்கு இந்த புவி சார்ந்த அறிவியலையும், மண் சார்ந்த வரலாறுகளையும் கற்றுக்கொடுக்கும் நோக்கிலும் எழுதத்தொடங்கினார்.

அவரது முதல் கடிதத்தில் இது குறித்த அறிமுகத்தையே கொடுத்திருப்பார். ஒரு பத்து வயது சிறுமியின் ஆர்வத்தை தூண்ட முயற்சிக்கும் வகையில் அவரது எழுத்துகள் இருந்தன. இந்த மனித இனம் தோன்றுவதற்கு முன்பிருந்த இயற்கைகளையும் விவரிக்கிறார்.

HBDNEHRU: மனித வரலாற்றை மகளுக்கு  கடிதம் மூலம் கற்று கொடுத்த நேரு

நேருவின் 30 கடிதங்களும் பூமி உருவானதில் இருந்து தொடங்கி நாகரிகம் வளர்ந்து, நாடாகப் பிரிந்து காரணம், காரியமின்றி நாடுகளுக்கிடையே நடக்கும் சண்டை, ஆதிக்கம், அரசியல் என அனைத்து படிநிலைகளையும் விவரித்துள்ளார். மேலும் இந்திரா என்ற ஆளுமை இந்திய அரசியலில் உருவாவதற்கு காரணமாகவும் இந்த 30 கடிதங்கள் இருந்தன என்பது முக்கியமாகும்.

இதையும் படிங்க:"ஜவஹர்லால் நேரு, ஜனநாயகத்தின் வெற்றியாளர்" - மல்லிகார்ஜுன கார்கே புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.