ETV Bharat / bharat

'ரஷ்யாவுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்' - உலகச் செய்திகள்

ஒரு நாடுடனான அதன் ராஜதந்திர உறவு என்பது மற்றொரு நாட்டிலிருந்து தன்னைத் விலக்கிக்கொள்வது என்று அர்த்தமல்ல என்று இந்தியா தனது ராஜதந்திர நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருந்தது.

இந்திய-ரஷ்ய உறவு
இந்திய-ரஷ்ய உறவு
author img

By

Published : Apr 9, 2021, 7:58 AM IST

Updated : Apr 9, 2021, 9:53 AM IST

தான் டெல்லியின் மிக நல்ல நண்பர் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிரெம்ளினில் பெருமையுடன் அறிவித்திருந்தார். 2014இல் பிரேசில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின்போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, “ரஷ்யா எங்கள் சிறந்த நண்பர் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும்” என்று கூறியிருந்தார்.

இரு நாடுகளின் தலைமையும் சோதனையான காலகட்டங்களில் தங்களது நட்பை உறுதிப்படுத்திய நாள்கள் இருந்தன. இருப்பினும், சமீபத்தில் அதில் சில மாற்றங்கள் இருப்பதாகத் தெரிகின்றன.

இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிவருகிறது என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து, ரஷ்யா இஸ்லாமாபாத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதே நேரத்தில் ரஷ்யாவிடமிருந்து பெறப்படும் அதே வகையான பாதுகாப்பு உபகரணங்களும் சீனாவிற்கும் கிடைத்துவருவதால் இந்தியாவும் பீதியடைந்தது.

இந்த அழுத்தத்தின் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து இந்தியாவை விலக்கிவைக்க ரஷ்யா உறுதிசெய்ததாகச் செய்திகள் வந்தன. இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற இருந்தது. கரோனா காரணமாகக் கூறப்பட்டபோதிலும், உச்சி மாநாடு ரத்துசெய்யப்பட்டதற்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருந்ததாகத் தெரிகின்றன.

இந்திய-ரஷ்ய உறவு
இந்திய-ரஷ்ய உறவு

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள புடின்-மோடி உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் 2021 ஏப்ரல் 6ஆம் தேதி டெல்லியில் சந்தித்தனர். 2018ஆம் ஆண்டில், இந்தியா அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் குறித்து எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் ரஷ்யாவுடன் எஸ்-400 தரையிலிருந்து விண்ணில் பாயும் ஏவுகணைகளை வாங்க சம்மதித்தது.

எஸ்-400 ஏவுகணைகள்
எஸ்-400 ஏவுகணைகள்

அண்மையில் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு அமெரிக்காவின் எச்சரிக்கைகளைக் கவனத்தில்கொள்ள கவலைப்படவில்லை. இந்தியா-ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் ஜெய்சங்கர், செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று அறிவித்தனர்.

இரு நாடுகளும் உறவில் ஒன்றுக்கொன்று கவனம் செலுத்துகின்றன. உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் இருவருக்கும் பயனளிக்கும் என்பதே இந்த அறிக்கையின் சாராம்சம்.

சோவியத் யூனியன் பிளவுபடுவதற்கு முன்னர், இந்தியாவின் நம்பகமான பாதுகாப்பு நட்பு நாடு மாஸ்கோ மட்டுமே. சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், சோவியத் ஒன்றியத்தின் வாரிசாக புடின் இந்தியாவுடனான நல்லுறவைத் தொடர்ந்தார். அணு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளில் ரஷ்யாவின் ஒத்துழைப்பை இந்தியா விரும்பியது. இருப்பினும், ரஷ்யா தனது சொந்த நலனுக்காக இந்தியாவைக் கைவிட்ட சந்தர்ப்பங்கள் இருந்தன.

இந்திய-ரஷ்ய உறவு
இந்திய-ரஷ்ய உறவு

இந்தியா ஏற்பாடுசெய்த போர் விமானங்களின் ஏலத்தில் ரஷ்ய மிக் விமானங்களைச் சேர்க்கத் தவறியதால், மாஸ்கோ இந்தியாவுக்கு அணு உலைகளை வழங்குவது குறித்த வழிகாட்டுதல்களில் திருத்தங்களை வலியுறுத்தத் தொடங்கியது. 18 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியா, சீனா, ரஷ்யா இடையே ஒரு மூன்று நாடுகள் கூட்டணியை புடின் ஆதரித்தார். ஆனால் புடின் பெய்ஜிங்குடன் நெருக்கமாக நகர்கிறார் என்பது வெகு தாமதமாகவே கண்டறியப்பட்டது.

சீனாவின் பொருளாதாரச் செல்வாக்கு, ரஷ்யாவின் ராணுவம் ஆகியவை குறித்த அமெரிக்க கொள்கைகள், புடின்-ஜி ஜின்பிங்கை நெருக்கமாகக் கொண்டுவரக்கூடும்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து அண்டை நாடுகளிலும் அச்சத்தை அதிகரித்தது. ஆனால் ரஷ்யா இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா-இந்தியா ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு நாடுகள் பாதுகாப்பு அமைப்பான குவாட்டில் இந்தியா இணைந்தது.

இதனால் இந்தியா அமெரிக்காவின் கைப்பாவை ஆகிவிட்டது என்று ரஷ்யா குற்றஞ்சாட்டியது, இது இந்தோ-ரஷ்ய உறவுகளின் ஏற்படும் உளவியல் தூரத்தைக் குறிக்கிறது. இந்தத் தூரம் தொடர்ந்தால் அல்லது மேலும் மோசமடைந்தால் அது சீனாவிற்கே சாதகமாக முடியும்.

மோடி-புடின் கைக்குலுக்கியபோது
மோடி-புடின் கைக்குலுக்கியபோது

ஒரு நாடுடனான அதன் ராஜதந்திர உறவு என்பது மற்றொரு நாட்டிலிருந்து தன்னைத் விலக்கிக்கொள்வது என்று அர்த்தமல்ல என்று இந்தியா தனது ராஜதந்திர நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருந்தது.

அமெரிக்கா, ரஷ்யாவுடனான வர்த்தகம், ராஜதந்திர உறவுகளைச் சமமாக நிலைநிறுத்துவதற்கு இந்தியா தனது ராஜதந்திரத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் சீனா தனது வரம்புகளை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய ராஜதந்திர வலிமை மட்டுமே நாட்டுக்கு நீண்டகால பாதுகாப்புக் கவசமாக இருக்கும்.

Last Updated : Apr 9, 2021, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.