டெல்லி: கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவித்தொகை மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கலாம் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்ததை உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி ஒன்றிய அரசு தெரிவித்தது.
அதன்படி கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள், கரோனா சிகிச்சைப் பணி, தடுப்புப் பணி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிவாரணத் தொகை மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்கப்படும். சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர் வழங்கிய வழிகாட்டுதலின்படி வழங்கப்பட்ட கரோனா இறப்புச் சான்றிதழ், அதனுடன் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து நிவாரணத் தொகை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காற்று மாசுவால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள காத்திருக்கும் சென்னை - சி40 எச்சரிக்கை!