டெல்லி: பாஜக செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா, “பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான தொகுதிகளில் வெற்றிபெறும்” என்று கூறினார்.
பிகார் மக்கள் வளர்ச்சியை எதிர்நோக்குகின்றனர். அதனடிப்படையிலேயே அவர்கள் வாக்கு செலுத்துவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கீழ் பிகார் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த உண்மையை மக்கள் அறிவார்கள்.
கடந்த காலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி பிகாரின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. ஆகையால், மக்களும் பிகாரின் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் வர வேண்டும் என்று நினைக்கின்றனர்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியிலிருந்த போது காட்டாட்சி நடந்தது. இந்த காட்டாட்சியில் தேஜஸ்வி யாதவ், பட்டத்து இளவரசராக திகழ்ந்தார். அந்த 15 ஆண்டுகால இருண்ட ஆட்சி மக்கள் மனதில் உள்ளது. ஆகவே ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு ஆதரவாக மக்கள் ஒருபோதும் நிற்க மாட்டார்கள். தன்னால் நிறைவேற்ற முடியாது என தெரிந்தும், தேஜஸ்வி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.
இதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்தலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால் இதெல்லாம் ஒருபோதும் வெற்றி பெறாது” என்றார்.
மேலும், “அனைவராலும் கூட்டம் கூட முடியாது. ஆனால் இதெல்லாம் ஆட்சியமைக்கும் அளவுகோல்கள் அல்ல. பொதுமக்கள் அனைத்தையும் கவனித்துவருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு, நல்லாட்சி என மக்கள் பல விஷயங்களை மனதில் வைத்தே வாக்களிப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் பெண் எம்பி அன்னு டாண்டன் சமாஜ்வாதியில் இணைந்தார்!