பஸ்தர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் காடுகளில் நக்ஸலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
இந்தப் பகுதிகளில் நக்ஸலைட்டுகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் நக்ஸலைட்டுகள் நவீன ஆயுதங்களை பயன்படுத்திவருவது தெரியவந்துள்ளது. இதனை பஸ்தர் சரக ஐஜி சுந்தர்ராஜ் பத்திலிங்கம் உறுதிசெய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் நடந்த என்கவுன்ட்டர்களின் போது நக்சலைட்டுகள் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
நக்ஸலைட்களிடம் பிஜிஎல் உள்ளிட்ட நவீன ஏவுகணைகளும் உள்ளன. மேலும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும் உள்நாட்டு ராக்கெட் ஏவுகணைகள் உள்ளன. இதற்கிடையில் நக்ஸல்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட அதிநவீன ஆயுதங்களையும் நக்ஸல்கள் கொள்ளையடித்துள்ளனர்.
நக்சல்கள் இப்போது இந்த நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள், பாதுகாப்புப் படைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள்” என்றார். மேலும், நக்ஸல்களுக்கு அதிநவீன ஆயுதங்கள் எவ்வாறு கிடைக்கின்றன என்பது தொடர்பாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன” என்றும் சுந்தர்ராஜ் பத்திலிங்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க : சத்தீஸ்கரில் 12 பெண்கள் உள்பட 24 நக்ஸல்கள் சரண்!