ETV Bharat / bharat

'டவ்-தே' புயலால் நடுக்கடலில் சிக்கிய 400 பேர் - மீட்பு பணி தீவிரம்! - 'டவ்-தே' புயல்

மும்பை: நடுக்கடலில் 400 பயணிகளுடன் இரண்டு படகுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில், இந்திய கடற்படையின் போர்க் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

Navy
மும்பை
author img

By

Published : May 18, 2021, 12:52 PM IST

'டவ்-தே' புயல் காரணமாக, மும்பையில் நடுக்கடலில் 400 பேருடன் இரண்டு கப்பல்கள் சிக்கிக்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கப்பலில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணியில், இந்தியக் கடற்படையின் மூன்று போர் கப்பல்களான ஐ.என்.எஸ் கொல்கத்தா, ஐ.என்.எஸ் கொச்சி மற்றும் ஐ.என்.எஸ் தல்வார் ஆகியவை களமிறக்கப்பட்டுள்ளன. அதே போல, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான பி81 விமானம், வான்வழி தேடுதல் பணியிலும் இறங்கியுள்ளது.

'பி305' கப்பலிலிருந்து இதுவரை 146 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, அசாதாரண காலநிலை நிலவி வருவதால், மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன.

'டவ்-தே' புயலால் நடுகடலில் சிக்கிய 400 பேர்

அதே போல, மஹீமில் கொலாபா பாயிண்ட் பகுதியில் 137 நபர்களுடன் மற்றொரு கப்பல் சிக்கிக்கொண்டுள்ளது. அங்கிருக்கும் பயணிகளை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.