சண்டிகர்: உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை தழுவியது. மறுபுறம் பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற நான்கு மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது.
இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மாற்றங்களை கொண்டுவரவும் ஐந்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சோனியா காந்தி நேற்று உத்தரவிட்டார்.
-
As desired by the Congress President I have sent my resignation … pic.twitter.com/Xq2Ne1SyjJ
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">As desired by the Congress President I have sent my resignation … pic.twitter.com/Xq2Ne1SyjJ
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 16, 2022As desired by the Congress President I have sent my resignation … pic.twitter.com/Xq2Ne1SyjJ
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 16, 2022
இந்த உத்தரவின்படி, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் நமீரக்பம் லோகன்சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் பதவிவிலகுகின்றனர்.
அதனடிப்படையில், இன்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "சோனியா காந்தியின் உத்தரவுபடி நான் எனது ராஜினாமாவை அனுப்பிவிட்டேன்" என்று பதவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பகவந்த் மானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...