கேரளா: சேலத்தைச் சேர்ந்த மருத்துவரான ராஜாத்தி(44) தனது குடும்பத்தினருடன் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். தஞ்சையைச் சேர்ந்த தனது நண்பரின் குடும்பத்தையும் ராஜாத்தி அழைத்துச் சென்றுள்ளார். இரு குடும்பத்தினரும் திருவனந்தபுரம் சென்றடைந்த பின்னர், ஆழிமலையில் உள்ள கடற்கரையை அருகே ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று(ஏப்.15) காலையில் ராஜாத்தியும், அவரது நண்பரின் மகள் சாய் கோபிகா(9)-வும் கடற்கரையில் நடைபயணம் செய்ததாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக இருவரும் கடல் அலையில் சிக்கியுள்ளனர். இருவரும் நீண்ட நேரமாக ரிசார்ட்டுக்கு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் கடற்கரைக்கு சென்று பார்த்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். பிறகு ராஜாத்தியும், சிறுமி சாய் கோபிகாவும் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் போலீசார் இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சபரிமலையில் தமிழக பயணி தற்கொலை - என்ன காரணம்?