ETV Bharat / bharat

இந்திய பொருளாதார வளர்ச்சியின் நிலை என்ன? ஜிடிபி ஆய்வறிக்கை வெளியீடு! - ஜிடிபி

கடந்த 2022 -23 நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 2 சதவீதம் என தேசிய புள்ளியியல் துறை கணித்து உள்ளது.

GDP
GDP
author img

By

Published : May 31, 2023, 7:40 PM IST

டெல்லி : 2022- 23 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6 புள்ளி 1 சதவீதமாக வளர்ச்சி அடைந்து உள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டு உள்ளது. அதன்படி நடந்து முடிந்த 2022- 23 நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6 புள்ளி 1 சதவீதமாக வளர்ச்சி கண்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அதேநேரம், கடந்த 2021 - 22 நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிட்டு பார்க்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதம் வரை கூடுதலாக வளர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2022 - 23 நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை காட்டிலும் கடைசி காலாண்டின் உற்பத்தி 4 புள்ளி 5 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2022 -23 நிதி ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 2 சதவீதமாக பதிவாகி உள்ளது.

கடந்த 2021 - 22 நிதி ஆண்டில் 9 புள்ளி 2ஆக மொத்த உள்நாட்டு உற்பத்தி பதிவான நிலையில், 2022 -23 நிதி ஆண்டில் 7 புள்ளி 2 ஆக விரிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2022 -23 நிதி ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தகாந்த தாஸ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறி இருந்தார்.

விவசாயம், மீன் பிடி துறை 4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் கடந்த நிதி ஆண்டில் இந்த துறைகள் 3 புள்ளி 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை 2022 ஆம் நிதியாண்டில் 13 புள்ளி 8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்த நிலையில் 2023ஆம் நிதியாண்டில் 14 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2022- 23 ஆம் நிதி ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில், நாட்டின் வளர்ச்சி 7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என கணிப்பட்டு இருந்தது. அதேநேரம் 2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்தின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4 புள்ளி 5 சதவீதமாக கணிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

நடப்பு 2023- 24 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிஞர்கள் கணித்து உள்ளனர்.

இதையும் படிங்க : Gyanvapi Mosque case: மசூதி நிர்வாகம் மனு தள்ளுபடி... அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.