புதுச்சேரி ராஜிவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 11ஆவது தேசிய ஹாப்கிடோ பாக்ஸிங் போட்டி நேற்று (ஜனவரி 22) தொடங்கியது.
இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 5 வயது முதல் 30 வயது வரை உள்ள 400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக மாநிலம் வாரியாக வீரர், வீராங்கனைகளின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அனைத்திந்திய துணைத் தலைவர் சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.
வீரர், வீராங்கனைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பரிசுகளை வழங்க உள்ளார்.
பெண்களுக்கான தற்காப்புக் கலையாக, இந்த ஹாப்கிடோ பாக்ஸிங் உள்ளதாகவும், பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள இதில் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம் என வீராங்கனைகள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் ஐபிஎல்.. ஆனால்...!