பாட்னா: மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அனைத்து துப்பாக்கிகளும் வெடிக்க உள்ளது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாத்வ் தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாத்வ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, "Mumbai mein Narendra Modi ke nareti (throat) pe chadhne jaa rahe hain humlog. Narendra Modi ka nareti pakde huye hain hum, hatana hai.” INDIA கூட்டணியில் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறுவதற்கு முன்பு ஆகஸ்ட் 31ஆம் தேதி நரேந்திர மோடியின் தொண்டைப் பகுதியான மும்பைக்கு வர உள்ளோம். மேலும் அவரின் தொண்டையை பிடித்து மும்பையிலிருந்து வெளியேற்ற உள்ளோம் என INDIA கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டும் விதமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக இருவர் கைது!
INDIA கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மாநிலங்களவையில் நடைபெறும் தேர்தல் குறித்தும், இடங்கள் ஒதுக்கப்படுவது தொடர்பாக விவாதம் செய்யப்பட உள்ளன. அதே போன்று INDIA கூட்டணிக்கு என புதிய சின்னம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்கட்சிகாக உள்ள INDIA கூட்டணியினர் செப்டம்பர் 1ஆம் தேதி மும்பையில் ஒரே நேரத்தில் கூட்டம் நடத்த உள்ளனர்.
-
बीजेपी का जन्म ही पिछड़ा विरोध में हुआ है। बीजेपी कभी भी नहीं चाहती कि वंचित वर्गों का सामाजिक और आर्थिक उत्थान हो। किसी भी वर्ग के गरीबों के कल्याणार्थ हेतु बिहार सरकार द्वारा कोई सामाजिक सर्वे कराना गरीब विरोधी BJP को अनुचित कैसे लगता है? pic.twitter.com/nRSMyzfzH1
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">बीजेपी का जन्म ही पिछड़ा विरोध में हुआ है। बीजेपी कभी भी नहीं चाहती कि वंचित वर्गों का सामाजिक और आर्थिक उत्थान हो। किसी भी वर्ग के गरीबों के कल्याणार्थ हेतु बिहार सरकार द्वारा कोई सामाजिक सर्वे कराना गरीब विरोधी BJP को अनुचित कैसे लगता है? pic.twitter.com/nRSMyzfzH1
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) August 28, 2023बीजेपी का जन्म ही पिछड़ा विरोध में हुआ है। बीजेपी कभी भी नहीं चाहती कि वंचित वर्गों का सामाजिक और आर्थिक उत्थान हो। किसी भी वर्ग के गरीबों के कल्याणार्थ हेतु बिहार सरकार द्वारा कोई सामाजिक सर्वे कराना गरीब विरोधी BJP को अनुचित कैसे लगता है? pic.twitter.com/nRSMyzfzH1
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) August 28, 2023
மும்பையில் நடக்கவுள்ள INDIA கூட்டணி கூட்டத்தில் 26 முதல் 27 எதிர்கட்சிகள் கலந்து கொள்ளும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட 31ஆம் தேதி மாலை மும்பையில் அறிமுக கூட்டமும், செப்டம்பர் 1ஆம் தேதி அதிகாரப்பூர்வ கூட்டமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை INDIA கூட்டணி சார்பாக இரண்டு கூட்டங்கள் நடைபெற்று உள்ளது.
மேலும், இக்கூட்டத்தில் INDIA கூட்டணியின் புதிய சின்னம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், INDIA கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல் நாளை (ஆகஸ்ட் 30) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு