புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வேளாண் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் பெரும்பான்மை இருப்பதால் எதேச்சையாக சர்வாதிகாரம் மூலம் நிறைவேற்றினார்கள். அதன் விளைவு தான் டெல்லியில் போராட்டம் நடக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
வேளாண் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும். பிரதமர் அறிவித்தது போல் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை தர வேண்டும். இதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும். சட்டங்கள் விவசாயிகளுக்கு பலன் அளித்து மாற்றம் கொண்டு வரும் என பிரதமர் கூறுகிறார். நடைமுறையில் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு படிப்படியாக பறித்து வருகிறது. மின்சார விநியோகம் தனியார் மையம், தொழிற்சாலைகளை மூட வேண்டும். மக்களுக்கு இலவச அரிசிக்கு பதில் பணமாக வழங்குதல் போன்ற தொல்லைகளை மத்திய அரசு செய்துவருகிறது. இதற்கு கிரண்பேடியை கருவியாக பயன்படுத்துகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: விரைவில் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம்