ETV Bharat / bharat

அமைச்சர்கள் கைது, சிபிஐ அலுவலகம் முன் மம்தா தர்ணா! - நாரதா ஊழல் சிபிஐ கைது நடவடிக்கை

மேற்கு வங்கத்தில் திருணமூல் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சிபிஐ அலுவலகம் முன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
author img

By

Published : May 17, 2021, 3:47 PM IST

Updated : May 17, 2021, 5:36 PM IST

நாரதா சிட் பண்ட் ஊழல் விவகாரத்தில் மேற்கு வங்க மாநில அமைச்சர்கள் பிர்ஹத் ஹகிம் மற்றும் சுபர்தா முகர்ஜியை சிபிஐ அலுவலர்கள் இன்று (மே.17) கைது செய்துள்ளனர். மேலும், ஆளும் திருணமூல் சட்டப்பேரவை உறுப்பினர் மதன் மித்ரா, அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் சோவ்ஹான் சாட்டர்ஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தாவில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகம் முன் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுமார் 6 மணி நேரம் தர்ணா போராட்டம் மேற்கொண்டார். இது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்

கைது செய்யப்பட்ட நால்வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 2014ஆம் ஆண்டில் நாரதா சிட் பண்டில் ஏற்பட்ட முறைகேட்டில் திருணமூல் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. அப்போது நடத்தப்பட்ட பத்திரிகை ஸ்டிங் ஆப்பரேஷனில் மூத்த தலைவர்கள் பணம் வாங்கியது வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய பலர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தற்போது எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 17, 2021, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.