ETV Bharat / bharat

Nandan Nilekani: மும்பை ஐஐடி ரூ.315 கோடி நன்கொடை அளித்த நந்தன் நிலேகனி! - இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி தான் படித்த மும்பை ஐஐடி-க்கு 315 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 20, 2023, 9:51 PM IST

மும்பை: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்து வருபவர் நந்தன் நிலேகனி. இவர், கடந்த 1973ஆம் ஆண்டு மும்பை ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் இளங்கலை பட்டப்படிப்பினை முடித்தவர். தற்போது பெரும் தொழிலதிபராக உள்ள அவர் தான் பயின்ற கல்விக் கூடத்திற்கு தன்னால் ஆன நன்கொடை வழங்க வேண்டும் என முன்வந்துள்ளார். அதற்காக 315 கோடி ரூபாய் பணத்தை மும்பை ஐஐடிக்கு வழங்கி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இவர் ஏற்கனவே மும்பை ஐஐடிக்கு 85 கோடி ரூபாய் வழங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் நன்கொடை வழங்கியுள்ளதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், "மும்பை ஐஐடி எனது பயணத்தின் தொடக்கப்புள்ளி எனவும், என்னுடைய வாழ்வில் முக்கிய அடித்தளமாக மும்பை ஐஐடி அமைந்தது எனவும் கூறியுள்ளார். மேலும், இந்நிறுவனத்துடனான என்னுடைய 50 வருடத் தொடர்பைக் கொண்டாடுகையில், அது முன்னோக்கி நகர்வதற்கும், அதன் எதிர்காலத்திற்கும் பங்களிப்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வெப்ப அலை நிலவும் மாநிலங்களுக்கு உதவி... மன்சுக் மாண்டவியா!

மேலும் இது குறித்துப் பேசியுள்ள நந்தன் நிலேகனி, "உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் பகுதிகளில் ஆராய்ச்சியைத் தூண்டுவதற்கும் இந்த நன்கொடை பயனாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது வெறும் நன்கொடை அல்ல எனத் தெரிவித்துள்ள நந்தன் நிலேகனி, எனக்கு அதிகம் கிடைக்கச் செய்த ஐஐடி மும்பைக்கு நான் அதிகம் கொடுக்க கடமைப் பட்டிருக்கிறேன் எனவும், நாளை இந்த உலகத்தை வடிவமைக்கும் மாணவர்களுக்கான எனது அர்ப்பணிப்பு எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மும்பை ஐஐடி இயக்குநர் மற்றும் பேராசிரியர் சுபாசிஸ் "மும்பை ஐஐடியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் நந்தன் நிலேகனி நிறுவனத்திற்காகத் தனது பங்களிப்பை வழங்குவது கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் எனக்கூறியுள்ளார். மேலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்கொடையானது ஐஐடி மும்பையின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், உலகளாவிய தலைமைப் பாதையில் அதை உறுதியாக வடிவமைக்கவும் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

1999 முதல் 2009 வரை நந்தன் நிலேகனி ஐஐடி பாம்பே ஹெரிடேஜ் அறக்கட்டளையின் குழுவில் பணியாற்றியுள்ளார். மேலும், 2005 முதல் 2011 வரை ஐஐடி நிர்வாகக் குழுவில் இருந்தார். அவருக்கு 1999 இல் மதிப்புமிக்க புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதும், அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு 7வது பகுதியாகக் கவுரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எதிர்க் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.