ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலாளர் நர லோகேஷ் கடந்த மாதம் 27ஆம் தேதி, சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில், பாத யாத்திரையை தொடங்கினார். இதில் நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகியுமான நந்தமுரி தாரக ரத்னாவும் (40) பங்கேற்றார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நாராயண ஹிருதாயலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
Heartbroken to learn of the passing away of #TarakaRatna garu. Gone to soon 💔. My deepest condolences to his family, friends & fans. May he rest in peace.
— Allu Arjun (@alluarjun) February 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heartbroken to learn of the passing away of #TarakaRatna garu. Gone to soon 💔. My deepest condolences to his family, friends & fans. May he rest in peace.
— Allu Arjun (@alluarjun) February 18, 2023Heartbroken to learn of the passing away of #TarakaRatna garu. Gone to soon 💔. My deepest condolences to his family, friends & fans. May he rest in peace.
— Allu Arjun (@alluarjun) February 18, 2023
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (பிப்.19) உயிர் பிரிந்தது. மறைந்த தாரக ரத்னாவுக்கு அலேக்யா என்ற மனைவியும், மகளும் உள்ளனர். மேலும் இவர், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவின் பேரன் ஆவார். "ஓகடோ நம்பர் குர்ராடு" (2002) படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஒருசில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
தாரக ரத்னா மறைவுக்கு ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் சிரஞ்சீவி, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சிரஞ்சீவி தனது டிவிட்டர் பதிவில், "தாரக ரத்னா மறைவு பெரும் வருத்தம் அளிக்கிறது. திறமை வாய்ந்த இளைஞர். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜூன் தனது டிவிட்டர் பதிவில், "தாரக ரத்னாவின் மறைவு என் மனதை நொறுக்கிவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து; டெல்லி செல்கிறார்