ETV Bharat / bharat

அப்துல் கலாமை நினைவுகூர்ந்த வெங்கையா நாயுடு! - அப்துல் கலாமுடன் நாற்பது ஆண்டுகள் சொல்லப்படாத கதைகள்

டெல்லி: பொருளாதார, சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்வதில் முன்னாள் குடியரசு தலைவர் கலாமை இளைஞர்கள் உத்வேகமாக கொள்ள வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நாயுடு
நாயுடு
author img

By

Published : Dec 3, 2020, 5:49 PM IST

'அப்துல் கலாமுடன் நாற்பது ஆண்டுகள் - சொல்லப்படாத கதைகள்' என்ற புத்தகத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை எழுதியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இப்புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பொருளாதார, சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்வதில் முன்னாள் குடியரசு தலைவர் கலாமை இளைஞர்கள் உத்வேகமாக கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலோனார் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார, சமூக ரீதியான சவால்களை எதிர்கொள்வதில் முன்னாள் குடியரசு தலைவர் கலாமை இளைஞர்கள் உத்வேகமாக கொள்ள வேண்டும். வித்தியாசமாக யோசித்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதற்கு தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். கிராமங்கள் மற்றும் சிறிய டவுன்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தர வேண்டும்.

பரவலாக்கப்பட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிராமங்கள், டவுன்கள் ஆகியவற்றை வளர்ச்சி மையங்களாக திகழ வைக்க குடிசைத் தொழில்களை பெரிய அளவில் ஊக்குவிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளை கட்டமைக்க வேண்டும். அடிப்படை கட்டமைப்புகளுக்கு வளர்ச்சியை ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளியை நீக்க கிராமப்புற பகுதிகளுக்கு நகர்ப்புற அடிப்படை வசதிகளை எடுத்துச் செல்லும் திட்டத்தை கலாம் வகுத்தார். இதற்கு, அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.