ETV Bharat / bharat

ஸ்விகியில் கேக் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு பேக்கரி கொடுத்த ஆச்சரியம்.. ட்விட்டரில் வைரல்! - Kapil Wasnik from Nagpur cake story

ஸ்விகி மூலம் மகாராஷ்டிராவில் உள்ள பிரபல பேக்கரியில் கேக் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு விநோதமான ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது.

ட்விட்டரில் வைரல்
ட்விட்டரில் வைரல்
author img

By

Published : May 22, 2022, 6:29 PM IST

நாக்பூர் (மகாராஷ்டிரா): நாக்பூரைச் சேர்ந்த கபில் வாஸ்னிக் என்பவர், ஸ்விகி மூலம் பிரபல பேக்கரியில் கேக் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் விவரங்களில், 'கேக்கில் முட்டை சேர்க்கப்பட்டிருந்தால் குறிப்பிடவும்' என்று தெரிவித்து ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் வந்த பிறகு கேக்கை திறந்து பார்த்த அவருக்கு சிரிப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாள் கேக்கில் பெயரை நடுவில் எழுதுவது போல், அந்த கேக்கின் நடுவில் (contain egg) முட்டை சேர்க்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கேக் புகைப்படத்துடன் வாஸ்னிக் இதை ட்விட்டரில் நேற்று பகிர்ந்தார். இது ட்விட்டரில் வைரலாகி பலரும், இதற்கு நகைச்சுவை கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

  • So I ordered a cake from a renowned bakery in Nagpur, through #Swiggy. In the order details I mentioned “Please mention if the cake contains egg”. I am speechless after receiving the order 👇🏼 pic.twitter.com/WHN0Ht20r0

    — Kapil Wasnik (@kapildwasnik) May 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து பதிலளித்துள்ள ஸ்விகி நிறுவனம், "பேக்கரி கடையினர் உங்களது குறிப்பைத் தவறாகப் புரிந்து கொண்டனர். இதற்காக வருந்துகிறேன். மேலும் உதவிக்கு உங்கள் ஆர்டர் ஐடியைப் பகிரவும்' என்று பதிவிட்டுள்ளது. பேக்கரி கடையினரின் தவறான புரிதலின் காரணமாக, நடந்த இந்த நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Hi Kapil, sorry to know that the restaurant partner failed to understand your special instructions. Allow us to take a closer look, please share the order ID for further assistance.
    ^Faizan

    — Swiggy Cares (@SwiggyCares) May 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகும் அந்தோனி அல்பானீஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.