ETV Bharat / bharat

இதைச் சாப்பிட்டால் 12 மணி நேரம் வரை பசிக்காது...? அதிசய "நாக்டூன்" கிழங்கு... - சாப்பிட்டால் 12 மணி நேரம் வரை பசிக்காது

உத்தரகாசியில் மலைக்கிராம மக்கள் உணவில் பயன்படுத்தும் நாக்டூன் என்ற வேர்க்கிழங்கு, நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

nagdoon
nagdoon
author img

By

Published : Sep 5, 2022, 9:40 PM IST

உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் நாக்டூன் (Nagdoon) என்ற அரியவகை வேர்க்கிழங்கு உணவுப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வேர்க்கிழங்கு ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. உத்தரகாண்ட்டில் 6 ஆயிரம் அடி உயரத்தில் மட்டுமே காணப்படும் இந்த நாக்டூனை, மலைக்கிராமங்களில் உள்ள மக்கள் பல நூற்றாண்டுகளாக உணவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கிழங்கை சாப்பிட்டால், 10 முதல் 12 மணி நேரம் வரை பசி எடுக்காது என்றும், அதேநேரம் உடல் வலிமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை உண்டால், மூட்டுவலி, வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதை பச்சையாக சாப்பிட்டால் வாயில் வீக்கம் ஏற்படும் என்றும், முறையாக சமைத்து உண்டால் அது ஆயுளைக் கூட்டும் அமிர்தத்திற்கு சமம் என்றும் கூறுகின்றனர். உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஜகோல் கிராமத்தில், நாக்டூன் கண்காட்சி நடத்தப்படுகிறது.

இதுவரை கிராம மக்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த இந்த வேர்க்கிழங்கின் மகிமைகள், தற்போது ஆராய்ச்சியாளர்களின் கண்களிலும் பட்டுள்ளது. மத்திய கர்வால் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த நாக்டூனை ஆய்வுக்கு அனுப்பினர். அதில் பல வியக்கவைக்கும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, இந்த நாக்டூன் கிழங்கில், அதிக அளவு புரதமும், பல வகையான ஊட்டச்சத்துகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, நாக்டூனை பயிரிட ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த நாக்டூனின் நன்மைகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டால், உலகளவில் இது பயன்படுத்தப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:சைவ உணவு உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்புகள் - ஆய்வில் அதிர்ச்சித்தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.