கர்நாடகா மாநிலம், மைசூருவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை வாங்கிச் செல்ல, அவரது மகனுக்கு மாநகராட்சி உறுப்பினர் கே.வி.ஸ்ரீதர் போன் செய்துள்ளார். ஆனால் மாநகராட்சி உறுப்பினருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இறந்தவரின் மகன் பதிலளித்துள்ளார்.
கரோனா தொற்று அச்சத்தில், தன் தந்தையின் உடலை வாங்க மறுத்த அவரது மகன், மாநகராட்சி சார்பில் இறுதி சடங்கை நடத்திவிடுமாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தனது தந்தையின் சேமிப்பு பணமான ரூ. 6 லட்சத்தை மட்டும் தன்னிடம் கொடுக்குமாறு, இறந்தவரின் மகன் கோரியுள்ளார்.
தந்தையின் உடலை அடக்கம் செய்ய முன்வராத மகன், அவரது சேமிப்பைப் பணத்தை மட்டும் கோரும் சம்பவம் மனித நேயத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க:நீலகிரியில் விளையும் பச்சை ஆப்பிள்: ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் கர்ப்பிணிகள்!