ETV Bharat / bharat

மத்திய பிரதேசத்தில் மாயாஜாலம்: வானத்தில் தெரிந்த வர்ணஜாலம்! - வானத்தில் தெரிந்த விண்கல்

மத்திய பிரதேசத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெடித்து சிதறிபோன விண்கல் ஒன்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது வானத்தில் 40 வினாடிகள் தெளிவாக தெரிந்துள்ளது. அப்போது, வானம் முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது.

மத்திய பிரதேசத்தில் மாயாஜாலம்
மத்திய பிரதேசத்தில் மாயாஜாலம்
author img

By

Published : Apr 3, 2022, 9:29 AM IST

மத்தியப் பிரதேசம்: ஓர் அற்புதமான காட்சி நேற்றிரவு வானத்தில் காட்சியளித்துள்ளது. மத்தியப் பிரதேச தலைநகர் போபால், உஜ்ஜைன், பெத்துல் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணியளவில் 40 வினாடிகளுக்கு மர்மமான ஒளி ஒன்று வானத்தில் தெரிந்துள்ளது. இதை கண்ட மக்கள் தங்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்துள்ளனர்.

வானத்தில் 40 வினாடிகளுக்கு தெரிந்தது என்ன, எதனால் இது ஏற்பட்டது என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், வானத்தில் காணப்பட்டது விண்கல் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல், வானில் இருந்து கீழே விழும்போது சிலநேரம் இதுபோன்று வண்ண ஒளியை ஏற்படுத்தும்.

ஏன் விண்கல் எரிகிறது?: இதுகுறித்து உஜ்ஜைன் வானியல் கண்காணிப்பகத்தின் கண்காணிப்பாளர் ஆர்.பி. குப்தா கூறும்போது, "விண்கற்கள் வானில் இருந்து விழுவது அடிக்கடி நிகழும். அவை வளிமண்டலத்தில் நுழைந்த உடனேயே அழிந்துவிடும். இந்த முறை விண்கல் சற்று பெரிதாக இருந்ததால், அவை கண்களுக்கு தெரிந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் மாயாஜாலம்: வானத்தில் தெரிந்த வர்ணஜாலம்!

மேலும், காற்றின் உராய்வினால் (Friction) விண்கல்லில் தீப்பிடித்து, அவை பல துண்டுகளாக சிதறுகின்றன. 99 விழுக்காடு துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந்துவிடுவதால், அவை இயல்பாக கண்களுக்கு தெரிவதில்லை. பொதுவாக, விண்கள் பாகங்களுக்கு சந்தையில் எந்த வித மதிப்பும் இல்லை. ஆனால், ஆராய்ச்சிக்கு என்று எடுத்துக்கொண்டால் அதன் துண்டுகள் உலகின் மிக விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திக் திக் நிமிடங்கள்... 14 அடி வெள்ளை ராஜநாகம்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.