மும்பை: சண்டிகரைச் சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து இஸ்ரேலில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் வெற்றிபெற்றுள்ளார். இப்பட்டத்தினைப் பெறும் மூன்றாவது பெண் என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறார் ஹர்னாஸ். இதற்கு முன்பாக 1994ஆம் ஆண்டில் சுஷ்மிதா சென், 2000ஆம் ஆண்டில் லாரா தத்தா பூபதி ஆகியோர் இப்பட்டத்தினை வென்றிருக்கின்றனர்.
பிரபஞ்ச அழகி என்னும் பட்டத்தை பெற்றதாக மேடையில் அறிவித்தபோது எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு ஹர்னாஸ், “அது மிகவும் அழகான தருணம். அங்கு பட்டம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட பெயர் என்னுடையது அல்ல; நம் நாட்டின் பெயரையே அறிவித்தனர், ஒவ்வொரு முறை என்னை என் நாட்டை அடையாளப்படுத்தி அழைக்கும்போது பெருமிதம்கொண்டேன்.
போட்டிக்கான ஆயத்தம்
மேலும், 30 நாள்கள் மட்டுமே இதற்கான பயிற்சியை மேற்கொண்டோம். தொடர்பியல், ரம்ப் வாக், ஒப்பனை, சிகையலங்காரம், உடற்பயிற்சி போன்ற பலதரப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டோம். இவை அனைத்தும் என் பெற்றோர், என்னை இப்போட்டிக்குத் தயார்ப்படுத்த உதவிய அமைப்பினையே சாரும்.
நான் சண்டிகரில் என் படிப்பை முடித்தேன். இந்த ஊரின் பெருமையே பலதரப்பட்ட மக்கள் ஒற்றுமையாக வாழ்வதுதான். என் குடும்பத்தினர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர். என் தந்தை என்னை ‘பஞ்சாப் கி ஷெர்னி’ என்றே அழைப்பார். மகப்பேறு மருத்துவரான என் தாய், ஒரு தோழியைப் போலவே என்னுடன் நடந்துகொள்வார்.
என்னுடைய 17 வயதில் மாடலிங் தொடங்கியபோது நான் கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாக இருந்தேன். இதற்கு முன்னர் பிரபஞ்ச அழகிப் பட்டம் பெற்ற சுஷ்மிதா சென், லாரா தத்தா இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இதற்கடுத்து வருபவர்களுக்கு நான் ஒரு முன் மாதிரியாக இருக்க விரும்புகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: Miss Universe - 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த பட்டம்