லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கரில் உள்ள கிணற்றில் பெண்ணின் உடல் 6 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு இன்று (நவம்பர் 15) தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் துண்டுகளாக கிடந்த உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து அசம்கர் எஸ்பி அனுராக் ஆர்யா கூறுகையில், "இது 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலாகும். கைகள், கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்டுள்ளன. தலையை காணவில்லை. மீதமுள்ள பாகங்களை மீட்டுள்ளோம். உடற்கூராய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம். அதன்பின்னரே உண்மை தெரியவரும்.
அதோடு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்பவயிடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் இந்த உடல் 2 நாட்களுக்கு முன்பு வீசப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ளாடை மட்டுமே இருந்தது எனத் தெரிவித்தார். இதனிடையே உடல் துண்டுகளாக கிணற்றில் மிதக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: "ஷ்ரத்தா அஃப்தாபை பிரியவே நினைத்தாள்..." - ஷ்ரத்தாவின் பெஸ்டிகள் உருக்கம்