நீங்கள் இந்தியாவில் நீண்ட காலமாக இருந்துவருகிறீர்கள். பல நாடுகளுக்கு பயணம் செய்து தங்கி பல சமூகங்களை கண்டுள்ளீர்கள். இதுதொடர்பாக உங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஆம், நான்(Taslima Nasrin)ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியத் துணை கண்டம் என பல சமூகங்களை பார்த்துள்ளேன். இந்திய துணைக் கண்டத்தில் உள்ள சமூகங்கள் ஆணாதிக்க சமூகமாக இருக்கின்றன. இங்கிருக்கும் ஜனநாயகம் உண்மையான ஜனநாயகம் அல்ல. பெண்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அது முழுமையாக இல்லை.
காரணம் பல சடங்குகள், கலாசாரங்கள் பெண்களுக்கு எதிராகவே உள்ளன. மத சட்டங்கள் பெண்களுக்கு எதிராகவுள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் பெண்கள் தங்கள் உரிமைகளை பெற போராட வேண்டியுள்ளது.
அரசும் மதமும் தனித்தனியாக பிரிந்து செயல்படும் நாடுகளில் பெண்களுக்கு அதிக உரிமைகள் உள்ளன. எனவே, இவை இரண்டும் தனித்தனியே இயங்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இயற்றப்படக்கூடாது. சமத்துவத்தின் அடிப்படையிலேயே சட்டம் இயற்றப்பட வேண்டும்.
இந்தியாவில் மத அடிப்படையில் சட்டங்கள் உருவாக்கப்படவில்லை. எனவே இங்க பெண்களுக்கு உரிய இடம் கிடைத்துள்ளதா
மதச் சட்டங்களை பின்பற்றும் சமூகங்களில், பெண்களின் நிலைமை மோசமாகவுள்ளது. இஸ்லாமிய தனிநபர் சட்டம்(Muslim Personal law) மத அடிப்படையில் ஆனது. மற்ற அனைவருக்கும் 1956ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் சுந்திரத்தை அனுபவிக்கிறார்கள்.
அத்தோடு மட்டுமில்லாது, பாரம்பரியம், சடங்குகளை பின்பற்றும் சமூகங்களில் பெண்களுக்கு உரிய உரிமைகள், சுதந்திரம் கிடைப்பதில்லை.
பெண்களுக்கு உரிய உரிமை கிடைக்க இஸ்லாமிய சமூக தலைவர்கள் ஏன் முன்வருவதில்லை
இஸ்லாமியர்கள் இடையே உரிய புரிதல் இல்லை. வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபாண்மையினரும் அங்குள்ள பெண்களுக்கு உரிய உரிமை வழங்க முன்வருவதில்லை. மதங்கள் பெண்களை அழுத்தி வைப்பதிலேயே குறியாக உள்ளது.
கல்வியின் காரணமாக சில இஸ்லாமியர்களுக்கு புரிதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், பல இஸ்லாமியர்கள் போதிய கல்வி அறிவு இல்லாததால் புரிதல் இல்லாமல், அறிவியல் பார்வை அற்று இருக்கின்றனர்.
இஸ்லாமியர்களுக்கான தலைவர் இஸ்லாமியர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தலைவர் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர். தலைவர் என்பவர் அனைத்து சமூகங்களையும் புரிந்து கொண்டு மதசார்பு இல்லாமல் செயலாற்ற வேண்டும்.
அந்த தலைவர் பெண் விடுதலை, சமத்துவம் குறித்து பேச வேண்டும். இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்தான் தலைமை ஏற்க வேண்டும் என்ற கருத்தே தவறு. அது பிற்போக்குத்தனமானது. தலைவர் என்பவர் மதங்களுக்கு அப்பாற்பட்டு, வளர்ச்சியை நோக்கிய சிந்தனையைக் கொண்டவராக இருக்க வேண்டும்.
இந்தியாவில் இதுபோன்ற ஒரு தலைவர்
பெரிய அரசியல் தலைவர்கள் யாரும் இந்துக்களுக்கு மட்டும் வளர்ச்சி வேண்டும், இஸ்லாமியர்களுக்கு தேவையில்லை எனக் கூறியதில்லை. எல்லாரும் வளர்ச்சிக் குறித்துதான் பேசுகிறார்கள். நாட்டில் நல்ல தலைவர்கள் உள்ளார்கள். அவர்கள் சமூக வளர்ச்சியை விரும்புகிறார்கள். மதச்சார்பின்மைதான் அவர்கள் விருப்பம்.
இந்தியா முன்பு போல இல்லை என பலர் சொல்கின்றனர். மதசார்பின்மை கொள்கை சரிவு கண்டுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்களா
அவ்வாறு நான் கருதவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் இங்கிருக்கும் மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மற்று சமூகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பலர் இங்குள்ளனர். நான் அமைதியாக வாழ விரும்புகிறேன்.
1947 பிரிவினையின்(1947 Patriation) போது இந்திய துணைக் கண்டம் பெரும் வன்முறையை துயரத்தை சந்தித்தது. இதன் காரணமாக லட்சக் கணக்கானோர் உயிரிழந்தனர். இதுபோன்ற ஒரு துயரம் இனி நடைபெற யாரும் விரும்பவில்லை.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் வெறுப்புணர்வு அதிகரித்ததாக கருதுகிறீர்களா
இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே மெல்லிய வெறுப்புணர்வு ஆங்காங்கே ஏற்படுகின்றன. ஆனால், இங்குள்ள இஸ்லாமியர்கள் வேறெங்கும் செல்லமாட்டார்கள். ஆங்காங்கே சில சம்பவங்கள் நடைபெறலாம்.
வங்கதேசத்திலும் இந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறன்றன. அதற்கு நான் எப்போதும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறேன். இந்தியாவைப் பொருத்தவரை, ஜனநாயகம் சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது. எனவே, இந்தியா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற சூழல் இந்தியாவில் ஏற்படாது என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பாண்மையாக உள்ளனர். ஆனால் அவர்கள் மதச்சார்பு அற்றவர்கள்.
ஏதோ ஒரு சில இந்துக்கள் மதவாதிகளாக இருக்கலாம். அதனால் முழுவதும் சரியல்ல எனக் கூறமுடியாது. அவ்வாறு நாம் நினைக்க வேண்டியதில்லை.
ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அங்கு பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து உங்கள் பார்வை
இது நடக்கக்கூடாத நிகழ்வு. பலர் கொல்லப்பட்டனர். பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தவறுகள் நடைபெறாது என தலிபான் சொல்கிறது. ஆனால் அது எதார்த்தத்தில் பிரதிபலிக்குமான எனத் தெரியவில்லை. ஐக்கிய நாடுகள், உலக நாடுகள் பல ஆப்கனை ஆதரிக்கிறது. இருப்பினும் அங்கு ஜனநாயகம் மீட்கப்படும் என நம்புகிறேன். வருத்தம் இருந்தாலும் நம்பிக்கையுடனே இருக்கிறேன்.
ஒரு எழுத்தாளராக உங்கள் படைப்புகள் குறித்து திருப்தி ஏற்பட்டுள்ளதா
இதுவரை 45 புத்தங்கள் எழுதியுள்ளேன், பெரும்பாலும் பெண் உரிமை குறித்த புத்தகங்கள். ஆனால் திருப்தி ஏற்படவில்லை. இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என எண்ணுகிறேன்.
புதிய தலைமுறை பெண்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா
இன்றைய தலைமுறை பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். நன்கு படித்து, பொருளாதார ரீதியாக சுந்திரமாக இருங்கள்.
இதையும் படிங்க: இந்தியாவின் வளர்ச்சிக்கு கல்வி முக்கியம்- ஜீன் டிரேஸ்