ETV Bharat / bharat

துர்க்கை சிலையை நிறுவிய இஸ்லாமியர் ; கிராம மக்கள் நெகிழ்ச்சி - Muslim youth installs Durga ido

மத்தியப் பிரதேசத்தில் நவராத்திரி பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர் ஒருவர் துர்க்கை சிலையை நிறுவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

நவராத்திரிக்கு துர்க்கை சிலையை நிறுவிய இஸ்லாமியர் ; கிராம மக்கள் நெகிழ்ச்சி

author img

By

Published : Oct 4, 2022, 7:42 AM IST

உஜ்ஜைன்: நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் நைனாவாத் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் ஒருவர் அந்த கிராமத்தில் இந்துகள் நவராத்திரி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் துர்க்கை சிலையை வைத்து மத நல்லிலக்கணத்திற்கு சான்றாகியுள்ளனர்.

அபித் எனும் இளைஞர் சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவில் பெரிய துர்க்கை பந்தலை ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிலைக்கு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இஸ்லாமியர்களும் பூஜையில் கலந்துகொள்வதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தில் இந்து, இஸ்லாம் என்ற மத வேறுபாடு இன்றி எல்லா பண்டிகைகளும் எல்லாரும் கொண்டாடும் வழக்கம் உண்டு. இஸ்லாமியர்கள் இல்லாமல் எந்த இந்துவும் தீபாவளி கொண்டாடுவதில்லை.

அதே போல எந்த ஒரு இஸ்லாமியரும் இந்துக்கள் இன்றி பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சர்பஞ்ச் சந்தேர்சின்ஹ் தியோரா கூறுகையில், “நாடெங்கும் தினம்தோறும் மதச் சண்டைகள் நிலவிவரும் நிலையில், எங்கள் கிராமம் இரண்டு மதங்களுக்கு இடையே உள்ள அன்பு பரிமார்த்தத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இங்கு ஒவ்வொரு நவராத்திரியும் இப்படி இரு மதத்தாராலும் கொண்டாடப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து - 2 குழந்தைகள் உள்பட மொத்தம் 5 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.