புதுடெல்லி: இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “படைப்பு மேதை இளையராஜா, தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன.
அவரது வாழ்க்கைப் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. அவர் ஒரு எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து, சாதித்துள்ளார். இன்று அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா - காரணம்?