ETV Bharat / bharat

'புல்லட்டு வண்டி' பாடலுக்கு நோயாளி அறையில் குத்தாட்டம் போட்ட செவிலியர்கள் - கோமா நோயாளிக்கு புதிய வகை சிகிச்சை - தெலங்கானா

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் கோமாவில் இருந்த நோயாளிக்கு இசை மற்றும் நடன சிகிச்சையை மருத்துவர்கள் கொடுத்து வரும் ஆச்சரியமூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

‘புல்லட்டு வண்டி’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் மருத்துவர்கள்

author img

By

Published : Apr 4, 2022, 10:59 PM IST

கரீம்நகர் (தெலங்கானா): இசையால் எந்த மனிதனையும் குணப்படுத்த முடியும் என்று ஒரு சொல்லாடல் உண்டு. மருத்துவம் மட்டுமல்ல, இசையும் மக்களின் ஆரோக்கியத்தைக் குணப்படுத்தும் என்பதை நிரூபித்துள்ளனர், கரீம்நகர் மருத்துவர்கள். பெரும்பாலான மருத்துவர்கள் பல மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகளுக்கு இந்த இசை சிகிச்சையை முயற்சிக்கின்றனர். இதுகுறித்து பேசிய அம்மருத்துவர்கள், இசை மற்றும் ஸ்வரங்களில் உள்ள உணர்ச்சிகள் நோயாளிகளின் நரம்புகளைத் தூண்டிவிடும் என்று கூறிகிறார்கள்.

கரீம்நகர் மாவட்டத்தில், பல நாள்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளிக்கு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அசைவுகளை கொண்டு வர முயன்றனர். பெத்தபள்ளி மாவட்டம், சுல்தானாபாத் மண்டலத்தில் உள்ள கொல்லப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ், மஞ்சள் காமாலை தொடர்பான நோயுடன் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாமல் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.

‘புல்லட்டு வண்டி’ பாடலுக்கு குத்தாட்டம் போடும் செவிலியர்கள்

பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 25 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே கோமா நிலையில் உள்ள ஸ்ரீனிவாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீனிவாஸுக்கு கண்களைத் திறந்து, கால்களை லேசாக அசைத்தபடி, அவரது உடலில் அசைவுகளைக் கொண்டுவரும் நோக்கத்துடன், அவர் அனுமதிக்கப்பட்ட அறையில் செவிலியர்கள் திரைப்படப்பாடல்களுக்கு நடனமாடத் தொடங்கினர்.

மருத்துவரின் விளக்கம்

அவரது கைகளில் வலிமை இல்லாததால், அவருக்கு மன வலிமையைக் கொண்டுவர மருத்துவர்கள் இந்த இசை மற்றும் நடன சிகிச்சையைத் தொடங்கினர். இந்த சிகிச்சையால் அவருக்குள் சில அசைவுகள் தொடங்குகின்றன. இதனால் அவரை ஐசியூவில் இருந்து பொது வார்டுக்கு மருத்துவர்கள் மாற்றினர். இயற்கையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், அவர் குணமாகும் வரை இந்த இசை சிகிச்சை தொடரும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கால்பந்து விளையாடும் குட்டி யானையின் க்யூட் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.