ETV Bharat / bharat

கரோனாவைச் சமாளிப்பதில் ‘மும்பை மாடல்’ சொல்லும் செய்தி என்ன? - மூன்றாவது அலை

மும்பை: கரோனாவின் மூன்றாவது அலைக்குக் கூட தயாராக இருக்கும் ’மும்பை மாடல்’ தமிழ்நாட்டுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் கற்றுக் கொடுப்பது என்ன?

சுரேஷ் கக்கானி
சுரேஷ் கக்கானி
author img

By

Published : May 12, 2021, 6:20 PM IST

Updated : May 12, 2021, 8:58 PM IST

கரோனாவைச் சமாளிப்பதில் ‘மும்பை மாடல்’ சொல்லும் செய்தி என்ன?

மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை கடுமையான நேரத்தில் கூட மும்பை மாநகரம் அதைத் திறன்பட சமாளித்து கரோனாவைக் கையாள்வதில் மும்பை மாடல் ஒன்றை உருவாக்கி வைத்திருந்தது. இதை உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் பாராட்டியது. கரோனாவின் மூன்றாவது அலைக்குக் கூட தயாராக இருக்கும், அந்த ’மும்பை மாடல்’ தமிழ்நாட்டுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் கற்றுக் கொடுப்பது என்ன?

நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி, உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும் வேளையில், அதிக மக்கள் தொகை கொண்ட மும்பை மாநகரம் அதை சமாளிக்கும் திறனைப் பார்த்து உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் வியந்து பாராட்டுகளைத் தெரிவித்திருக்கின்றன.

ஒரு கோடியே 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட மும்பை மாநகரத்தில் திங்கள் கிழமை (மே 10) அன்று 1,794 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் மத்தியிலிருந்து இதுவரை பதிவான தினசரி பாதிப்புகளில் இது மிகவும் குறைவான பதிவாகும். கரோனாவின் இரண்டாவது அலை மும்பையை தாக்கியபோது ஆரம்பத்தில் மருத்துவமனைகளில் படுக்கைப் பற்றாக்குறையாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் தள்ளாடியே கிடந்தது.

இது சம்பந்தமாக மும்பை நகராட்சி கூடுதல் ஆணையர் சுரேஷ் கக்கானி ஈடிவி பாரத்திடம் பேசும்போது, மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை கடுமையாகத் தாக்கியபோது கூட மும்பை மாநகரம் அதைத் திறன்பட சமாளித்து, கரோனாவைக் கையாள்வதில் மும்பை மாடல் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறது, கரோனாவின் மூன்றாவது அலைக்குக் கூட மும்பை மாநகரம் தயாராகவே இருக்கிறது என்றார்.

மேலும் அவர், ”கரோனா நோயாளிகளைக் கண்டுபிடித்தல், பரிசோதித்தல், பின்பு சிகிச்சை அளித்தல் என்ற அடிப்படை மருத்துவக் கொள்கையை மும்பை கடைப்பிடித்தது. பரிசோதனைக்கான எச்சில் திரட்டு என்றழைக்கப்படும் ஸ்வாப் கலெக்‌ஷனுக்காக மால்கள், சப்ஷி மண்டி, மீன் சந்தை போன்ற பல இடங்களில் நாங்கள் கியோஸ்கள் திறந்து வைத்திருக்கிறோம். அங்கே பலர் வந்து ஸ்வாப் கலெக்‌ஷன் செய்துவிட்டுப் போனார்கள். மேலும் தனிமைப்படுத்தும் வசதிகளைத் தயார்நிலையில் வைத்திருந்தோம். அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரையில், மும்பையில் கரோனா பாதிப்பு குறைந்திருந்த போது, இந்தத் தற்காலிக ஏற்பாடுகளைக் கலைத்துவிடுமாறு எங்களிடம் சொன்னார்கள். ஆனால் மார்ச் 31-ஆம் தேதி வரை அவற்றை நாங்கள் அப்படியே வைத்திருந்தோம். என்ன ஒன்று, அவற்றை இயக்குவதற்கும், பேணிக் காப்பதற்கும் கொஞ்சம் அதிகமாகவே பணம் செலவழிக்க வேண்டியிருந்தது” என்றார்.

தற்போது மும்பையில் 12,000-த்திலிருந்து 13,000 வரையிலான அளவில் படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் தயாராக இருக்கின்றன. மேலும், 13,000 கிலோ லிட்டர் கொள்முதல் திறனுடன் கூடிய திரவ ஆக்ஸிஜன் தொட்டியை நிர்மாணித்திருக்கிறோம். எல்லாப் படுக்கைகளையும் தொடர்ந்து இரண்டு, மூன்று நாள் இயக்குவதற்குத் தேவையான அளவுக்கு இரண்டு பெரிய ஆக்ஸிஜன் உருளைகள் தயாராகவே இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

மருந்துப் பற்றாக்குறையைப் பற்றி அவரிடம் கேட்டபோது: “ரெம்டெசிவர் போன்ற மருந்துகளின் பற்றாக்குறை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்காக இரண்டு லட்சம் சின்ன பாட்டில்கள் வாங்குவதற்கு நாங்கள் டெண்டர் விட்டிருந்தோம். அதனால் இப்போது மும்பையின் எந்த பொது மருத்துவமனையிலும் ரெம்டெசிவர் மருந்துப் பற்றாக்குறை அறவே இல்லை” என்றார்.

இதையும் படிங்க: ஆசிரியர் போல சபாநாயகர் நடுநிலையுடன் நடக்க வேண்டும்' - எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்

Last Updated : May 12, 2021, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.