ETV Bharat / bharat

Mumbai police suspends cop: உணவு தர மறுத்த மதுபான ஊழியரைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு

Mumbai police suspends cop: மும்பையில் தனக்கு உணவு தர மறுத்ததாக மதுபான கூடம் ஊழியரை காவல் அலுவலர் ஒருவர் தாக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து ஊழியரைத் தாக்கிய காவலர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Mumbai police suspends cop  assaulting hotel staff in Mumbai  Maharashtra news  மும்பையில் உணவக ஊழியரை தாக்கிய காவல் அலுவலர் நீக்கம்
உணவக ஊழியரை தாக்கிய காவல் அலுவலர் நீக்கம்
author img

By

Published : Dec 25, 2021, 1:20 PM IST

மும்பை: Mumbai police suspends cop: மும்பையில் உள்ள ஒரு மதுக்கடையின் காசாளரை உணவு வழங்க மறுத்ததற்காக காவலர் ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் காவல் உதவி ஆய்வாளரை மும்பை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகக் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

வகோலாவில் உணவகத்துடன் உள்ள மதுபான கூடத்தின் காசாளர் நள்ளிரவுக்குப் பிறகு உணவு, மதுவை வழங்க மறுத்ததால் காவலர் தாக்கிய காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் நடந்துள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில், காவல் அலுவலர் விக்ரம் பாட்டீல் காசாளரிடம் சென்று, அவரது சட்டையை இழுத்து அறைந்துள்ளார் இதனையடுத்து அந்த நேரத்தில் மேலாளரும் உணவக ஊழியர்களும் தலையிட்டு அவரைத் தடுக்க முயற்சிக்கினறனர்.

கரோனா தொற்றுநோய் தொடர்பான வழிகாட்டுதல்கள் காரணமாக உணவகங்களின் சமையலறை மூடப்பட்டதால், ஓசியாக உணவு, பானங்களை உணவக ஊழியர் வழங்க மறுத்ததால் கோபமடைந்த காவலர் ஊழியரைத் தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க:60,000 ரூபாயில் கார் தயாரிப்பு: பாராட்டிய மஹிந்திரா குழுமத் தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.