மும்பை: குடியரசு தினமான இன்று (ஜன 26) சர்ச்சைக்குரிய மலாட் விளையாட்டு வளாகத்திற்கு, 18 ஆம் நூற்றாண்டின் மைசூரு தலைவர் திப்பு சுல்தானின் பெயரை சூட்டுவதை முன்னிட்டு, அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக இவ்வளாகத்திற்கு திப்பு சுல்தானின் பெயரிடப்படும் என காங்கிரஸ் தலைவர் அஸ்லம் ஷேக் முன்பு அறிவித்தார். இது வலதுசாரி அரசியல்வாதிகள் மற்றும் இந்து தேசியவாதிகளிடமிருந்து நிறைய விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் பொருளாதார தலைநகரில் உள்ள பாஜக தொண்டர்கள் அப்பகுதியில் உள்ள அதர்வா கல்லூரியில் ஒன்று கூடி, அங்கிருந்து விளையாட்டு மைதானத்திற்கு எதிர்ப்பு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விளையாட்டு வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் அதுல் பட்கல்கர், விஷ்வ ஹிந்து பரிஷத், செய்தி தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் உட்பட பல பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் ஒரு நல்ல நாளில் நாட்டில் அமைதியின்மையை உருவாக்கும் முயற்சி என்றும் கூறினர். இதற்கு பதிலளித்த ஷேக், திப்பு சுல்தான் ஒரு துணிச்சலான தலைவர் என்றும், அவரது பெயரை ஒரு இடத்திற்கு சூட்டுவதில் தவறில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க :ஓய்வு பெற்றது ஜனாதிபதி மெய்க்காப்பாளரின் குதிரை