ETV Bharat / bharat

Raj Thackeray cancels 'Maha Aarti': ராஜ் தாக்கரே கைதாக வாய்ப்பு! - ரம்ஜான்

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கைதாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Raj Thackeray
Raj Thackeray
author img

By

Published : May 2, 2022, 8:01 PM IST

மும்பை: மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை மே3ஆம் தேதிக்குள் அகற்றாவிட்டால் ஒவ்வொரு மசூதி முன்பும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள் ஹனுமன் சாலிஸா ஓதுவார்கள் என ராஜ் தாக்கரே அதிரடியாக அறிவித்தார்.

இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில் தனது முடிவை ராஜ் தாக்கரே மாற்றியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் இன்று (மே2) பகிர்ந்துள்ள அறிக்கையில் மகா ஆரத்தி நிகழ்வு மற்றும் ஹனுமன் சாலிஸா ஓதுவதை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

அதில், “நாளை (மே3) ரம்ஜான் என்பதாலும் அக்ஷய திருதியை மற்றும் பரசுராமர் ஜெயந்தி என்பதாலும் பக்தர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே இன்று (மே2) இரவுக்குள் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா காவல்துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல் (Dilip Walse Patil) காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Mumbai: MNS leader Raj Thackeray cancels 'Maha Aarti', says 'we should not disturb the festival of Eid'
அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல்

பின்னர் இது தொடர்பாக பேசிய திலீப் வால்சே பாட்டீல், “ராஜ் தாக்கரேவின் பேச்சு சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்றார். முன்னதாக மே.1ஆம் தேதி மும்பையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, “இந்துத்துவ பெயரில் புதிய வீரர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். அவர்கள் மக்களால் கவனிக்கப்படமாட்டார்கள்.

ஏனெனில் அவர்களின் அரசியல் விளையாட்டு மராத்தி, இந்துத்துவா என மாறிமாறி தொடங்குகிறது. இந்தப் பொழுதுபோக்கு விளையாட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் விளையாட தொடங்கியுள்ளனர். அவர்களின் கொடியும் மாறிவிட்டது” என்றார் என்பது நினைவு கூரத்தக்கது.

கூம்பு ஒலிபெருக்கி

ராஜ் தாக்கரே கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகிவருவதால் மகாராஷ்டிராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : என் தந்தையை பாஜகவினர் ஏமாற்றிவிட்டனர்- உத்தவ் தாக்கரே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.