மும்பை (மகாராஷ்டிரா): இணையத்தொடர் எடுப்பதாக கூறி இளம் பெண்கள், மாடல்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்து இதற்கென தனியாக செல்ஃபோன் செயலி தயாரித்து பதிவேற்றம் செய்தாக எழுந்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, ராஜ் குந்த்ரா எடுத்திருக்கும் படங்கள் பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் அல்ல, அவை பாலுணர்வைச் சொல்லும் கலையம்சம் கொண்டவை என்று கூறி நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா தரப்பு பிணை கேட்டு வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், ராஜ் குந்தராவுக்கு ரூ. 50 ஆயிரம் பிணைத்தொகையுடன், பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.