மும்பை: இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று 187 பயணிகளுடன், கோவா விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோதே, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த விமானிகள், உடனடியாக விமானத்தை நிறுத்தினர்.
இதையடுத்து கடற்படை குழுக்களின் உதவியுடன், விமானம் ஓடுபாதையிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, பழைய இடத்தில் நிறுத்தப்பட்டது. விமான சேவை ரத்து செய்யப்பட்டதையடுத்து, மும்பை செல்ல வேறு விமானம் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த முதற்கட்ட ஆய்வில், விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடிக்கவில்லை என்றும், தவறான எச்சரிக்கை வந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இதேபோல் கடந்த 21ஆம் தேதி, டெல்லியில் இருந்து கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்தில், தரையிறங்குவதற்கு முன்பு இயந்திர கோளாறு ஏற்பட்டது, அதுவும் தவறான எச்சரிக்கை என பின்பு தெரியவந்தது.
இதையும் படிங்க:டிஆர்டிஓவின் குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி