ETV Bharat / bharat

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - பிரமாணப் பத்திரம் தாக்கல்!

முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பானது என மத்திய நீர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

Mullaperiyar dam
முல்லை பெரியாறு அணை
author img

By

Published : Mar 4, 2021, 8:02 PM IST

Updated : Mar 4, 2021, 9:33 PM IST

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க நிபுணர் குழுவால் ஏற்படுத்தப்பட்ட அணை பாதுகாப்பு துணைக் குழுவை கலைக்கக்கோரி கேரளாவைச் சேர்ந்த கோத்தமங்கலத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோ ஜோசப், தொகுதி பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஷீலா கிருஷ்ணன்குட்டி, ஜெஸ்ஸிமோல் ஜோஸ் ஆகியோர் ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். அந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டுவருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நீர் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்துள்ளது.

அதில், "நிலநடுக்கம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் அளவிற்கு முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு ரீதியாகப் பாதுக்காப்பாகவே உள்ளது. பாதுகாப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவினர் சட்டவிரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ செயல்படவில்லை.

மேலும், அணையின் பாதுகாப்பைத் துல்லியமாக ஆராய பொறியாளர்கள் உள்பட துணைக்குழு அமைக்கப்பட்டது. அணையில் மேற்பார்வைக் குழு தனது அதிகாரங்களை துணைக்குழுவிடம் ஒப்படைக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதுமட்டுமின்றி, துணைக்குழுவைக் கலைக்கக்கோரி தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீர்வள ஆணையம் சார்பில் கோரிக்கைவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கேரளாவில் கடல் சீற்றம்.. ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு!

Last Updated : Mar 4, 2021, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.