ஒன்றிய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜகவின் மாநிலங்களவை துணைத் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக துணைத் தலைவர் பதவியிலிருந்த பியூஷ் கோயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, காலியாக உள்ள துணைத் தலைவர் பதவிக்கு நக்வி நியமிக்கப்படவுள்ளார் என பாஜக தரப்பு வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
அனுபவமிக்க நக்வி
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும் நக்வி பணியாற்றிய அனுபவமுள்ளதால், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளகதாகவும் கூறப்படுகிறது.
கரோனா இரண்டாம் அலை பாதிப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பூதாகரமாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அனுபவமிக்க நபர் ஒருவரை இந்தப் பொறுப்பிற்கு கொண்டுவர பாஜக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மருத்துவருக்கு எமனான குரங்கு: சீனாவில் உருவெடுக்கும் புதிய வைரஸ்