ETV Bharat / bharat

பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவதாக கூறிவிட்டு, ஓர்ஸ்ட் புதுச்சேரியாக மாற்றி வருவதா? - எம்பி வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

ரங்கசாமி தலைமையிலான அரசு மத்திய அரசிடம் தேவையான நிதியை தட்டிக் கேட்கவும் அஞ்சுகிறது, கெஞ்சி கேட்கவும் அஞ்சுவதாக வைத்திலிங்கம் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

எம்பி வைத்தியலிங்கம்
எம்பி வைத்தியலிங்கம்
author img

By

Published : Dec 23, 2021, 9:45 AM IST

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் அவரது அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "புதுச்சேரியில் தொடர்மழையால் விவசாய நிலங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு சாலைகளும் பழுதடைந்துள்ளது, குறிப்பாக கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களின் குடிசைகளும் சேதமடைந்ததுள்ளது என்றார்.

ரூ.5 கோடி நிவாரணம்?

மேலும், இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்தில் வெள்ள நிவாரண நிதியாக புதுச்சேரிக்கு ரூ. 500 கோடி தேவை என்று தான் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு ரூ. 5 கோடி நிவாரணம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவே பதில் கிடைத்ததாகக் கூறினார். புதுச்சேரி அரசு ரூ. 300 கோடி நிவாரணம் கேட்ட நிலையில். மத்திய அரசு வெறும் ரூ. 5 கோடி கொடுத்து ஏமாற்றியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

தயக்கத்தில் புதுச்சேரி அரசு

இது குறித்து பேசிய வைத்திலிங்கம் " ரங்கசாமி தலைமையிலான அரசு, மத்திய அரசைக் கண்டுப் பயப்படுகிறது என்றும் மாநில வளர்ச்சிக்குத் தேவையான நிதியைத் தட்டிக் கேட்கவும் தயங்குகிறது; கெஞ்சி கேட்கவும் தயங்குகிறது " என்று கூறினார்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; விழா முக்கியம் தான். ஆனால், அதை விட மனித உயிர்களும் முக்கியம், வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

எம்பி வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு
எம்பி வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு

பெஸ்ட்க்கு மாறாக ஒர்ஸ்டாகும் நிலை

" தேர்தல் நேரத்தில் புதுச்சேரி வருகை புரிந்த மோடி, என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் புதுச்சேரியை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது மாநில வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் ஒர்ஸ்ட்டாக ஆக்கி வருகிறார் " என்றும் " மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி அரசு பயப்படுகிறது " என்று அவர் குற்றம் சாட்டினார்.

தலைமைச் செயலர் மீது பழி சுமத்துவதா?

மக்கள் திட்டங்களை நிறைவேற்ற காங்கிரஸ் ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது என்றும் " இதுவரை ரங்கசாமி தலைமையிலான அரசு புதுச்சேரி மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு, எந்தவித கடிதங்களும் எழுதவில்லை. நேரில் சென்றும் வலியுறுத்தவில்லை என்று தலைமை செயலர் மீது பழியைப் போட்டு விட்டு தப்பிக்க முயல்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க மதுரையில் தனி நீதிபதியை நியமிக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.