போபால்: இந்தி சீரியல் நடிகை வைஷாலி தாகூர் அவரது தந்தை மற்றும் சகோதரருடன் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகிறார். நேற்றிரவு பல மணி நேரமாகியும் அவரது அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்து குடும்பத்தார் உள்ளே சென்று பார்த்த போது வைஷாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து, அவரது உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் வைஷாலி. இவருக்கு 29 வயதாகிறது. வைஷாலியும், கென்யா நாட்டைச் சேர்ந்த மருத்துவர் அபிநந்தன் சிங்கும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன் பின் இவர்களது திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் வைஷாலி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது அறையில் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாகவும், இவரது காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:நயன்- விக்கி மீது போலீசில் புகார்..! தவறான முன்னுதாரணம் என குற்றச்சாட்டு...