ETV Bharat / bharat

ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்குத் தரையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த அமைச்சர்

போபால்: ம.பி.யில் தரையில் மண்டியிட்டு கையெடுத்துக் கும்பிட்டு ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

MP: Ministe
பிரதியுமான் சிங் தோமர்
author img

By

Published : Apr 25, 2021, 9:44 AM IST

நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான நோயாளிகளின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் திணறிவருகின்றன. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த பாதிப்பைச் சந்தித்துவருகின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியுள்ளது. குவாலியரில் மூன்று கரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மாநில எரிசக்தித் துறை அமைச்சர் பிரதியுமான் சிங் தோமர், ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மலன்பூர் இண்டஸ்ட்ரீஸில் உள்ள சூர்யா ரோஷ்னி தொழிற்சாலையைப் பார்வையிட்டார்.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள், 250 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தரையில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த அமைச்சர்

அப்போது, அமைச்சர் தோமர், தரையில் மண்டியிட்டு கை எடுத்துக் கும்பிட்டு ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அமைச்சரின் செயல் பலரை வியப்படையச் செய்தது.

இதையும் படிங்க: ஹாங்காங் டூ டெல்லி: 800 ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களைக் கொண்டுவந்த ஸ்பைஸ்ஜெட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.