உலகின் முன்னணி மருத்துவ ஆய்வு பத்திரிகையான லேன்செட் இந்தியாவில் நிலவும் கோவிட்-19 இரண்டாம் அலைக்கு மத்திய அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என விமர்சித்துள்ளது.
இதை சுட்டிக்காட்டி திரிணாமூல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹூவா மொய்த்ரா பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் நிலைமை குறித்து தங்கள் கவலையை தெரிவித்துவருகின்றன. இந்த சூழலுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான் காரணம் என லேன்செட் நிறுவனம் விமர்சித்துள்ளது.
ஆனால் மத்திய அரசோ நிலைமையை சீர் செய்யாமல், ட்வீட்டுகளை டெலிட் செய்வதில் கவனம் செலுத்துகிறது. மோடிக்கு எனது வணக்கங்கள், ராம்தேவ்தான் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது நினைத்து கொள்வார்' என தாக்கியுள்ளார்.