உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார் கும்ப மேளாவிற்கு சென்றுவந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 60 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் ஏப்ரல் 11 முதல் 15ஆம் தேதி காலக்கட்டத்தில் விழாவிற்கு சென்றுவந்துள்ளனர்.
யாத்திரைச் சென்ற 83 பேரில் 60 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், 22 பேர் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த 83 பேருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு, அவர்களை தனிமைபடுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிங்க: நில அபகரிப்பு புகார்: அமைச்சரின் பதவியை பறித்த கே.சி.ஆர்!