ETV Bharat / bharat

மது குடிக்கப்பணம் தராத தாயை உயிரோடு எரித்த கொடூர மகன் - Sreemathi was admitted to the hospital

கேரள மாநிலத்தில் சாராயம் குடிக்கப்பணம் தராத தாயை குடிகார மகன் உயிரோடு எரித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மது குடிக்க பணம் தராத தாயை உயிரோடு எரித்த மகன்

author img

By

Published : Sep 22, 2022, 3:56 PM IST

திருச்சூர்: கேரள மாநிலம், சம்மனூர் பகுதியில் குடிகார மகன் ஒருவர் குடிப்பதற்குப்பணம் தராத தாயை உயிரோடு எரித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த தாய் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சம்மனூர் பகுதியைச்சேர்ந்த 75 வயது ஸ்ரீமதி என்ற மூதாட்டி, அவரது மகன் மனோஜ் (53)உடன் வசித்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை(செப்-20) தாய் ஸ்ரீமதிக்கும்,மகன் மனோஜிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி, மனோஜ் அவரது தாயின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

இதனையடுத்து தாய் ஸ்ரீமதி 85 விழுக்காட்டுக்கும் அதிகமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அந்தப்பெண் குன்னம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். பின்னர் திருச்சூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததால், எர்ணாகுளத்தில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். எனினும், சிகிச்சைப்பலனின்றி அந்தப்பெண் நேற்று (செப்-21) உயிரிழந்தார். போலீசார் மனோஜை கைது செய்தனர். மதுவுக்குப் பணம் கேட்டு தாய் ஸ்ரீமதியை மகன் மனோஜ் தாக்குவது வழக்கம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உ.பி.யில் நிர்வாணமாக நடந்து சென்ற சிறுமி - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.