ETV Bharat / bharat

சிறுமி பாலியல் வன்கொடுமை: உறுதுணையாக இருந்த தாய்க்கு 14 ஆண்டுகள் சிறை

வறுமையை போக்க பணம் தருகிறார் என்பதற்காக தன் மகளை ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு உறுதுணையாக இருந்த தாய்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றம்
நீதிமன்றம்
author img

By

Published : Dec 9, 2022, 6:25 AM IST

Updated : Dec 9, 2022, 6:30 AM IST

மங்களூரு (கர்நாடகா): கர்நாடக மாநிலம் மங்களூருவில் தந்தையை இழந்த 15 வயது சிறுமி தாயுடன் தங்கி உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியின் குடும்பத்திற்கு பெயிண்டர் தெர்வி டிசோசா அறிமுகமாகி உள்ளார்.

தந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு பண உதவி வழங்கியவர், திடீரென சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் தாயிடம் முறையிட்ட போதும், அவர் பெரிதாக கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

ஒராண்டிற்கும் மேலாக சிறுமிக்கு, தெர்வி டிசோசா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறுமி மற்றும் அவரது தாய் மீது சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மாவட்ட குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை மீட்ட அதிகாரிகள் இது தொடர்பாக மாவட்ட காவல்துறைக்கு புகார் அளித்தனர். சிறுமியின் தாய் மற்றும் பெயிண்டர் டிசோசா, இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த வீட்டு உரிமையாளர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இறுதி வாதத்தை முடித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். சிறுமிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் டிசோசாவுக்கு 15 ஆண்டுகள் சிறை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

பாலியல் வன்கொடுமைக்கு உறுதுணையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், சிறுமிக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரி நீதிபதி ஆணையிட்டார்.

இதையும் படிங்க:வெற்றி பெற்றவர்களை பாதுகாக்கும் காங்கிரஸ் - இமாச்சலில் நடப்பது என்ன?

Last Updated : Dec 9, 2022, 6:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.