ஜாம்நகர்: மாஸ்கோவில் இருந்து கோவாவிற்கு தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது. கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
துரிதமாக செயல்பட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், சார்டர் விமானம், மற்றும் குஜராத், ஜாம்நகர் விமான நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தொடர்ந்து ஜாம்நகர் விமான நிலையத்தில் பிரத்யேக பகுதியில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
வழித் தடத்தில் இருந்து விமானம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விமான நிலைய போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் விரைந்தனர். விமானம் தனிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வைரலாகும் காவலரின் விடுமுறைக் கடிதம் - அப்படி என்ன எழுதியிருப்பாரு?