மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று (அக்.4) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அப்போது THIRUKKURAL-PEARLS OF INSPIRATION (திருக்குறள் – ஊக்கத்தின் முத்துக்கள்) என்ற ஆங்கில நூலை அமைச்சர் எல். முருகன், பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
புதிய இந்தியாவின் மக்கள் நலனுக்காக தங்கள் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பணிபுரிவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என மோடியிடம் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த முருகன், அண்மையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கலவர பூமியான லக்கிம்பூர் கேரி - நான்கு கம்பேனி படையினர் குவிப்பு